Friday, February 5, 2010

இவர்களின் பாதையில் நான்

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றானோ யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கின்றானோ அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கின்றானோ - அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன். - புரட்சியாளர் அம்பேத்கர்.

முன்னோர்கள் சொன்னார்கள் மதம் சொல்லுகிறது ரிஷிகள், மகான்கள் சொல்லுகின்றனர் என்று கருதாமல், தாராளமாக அறிவுக்கும்ஆராய்ச்சிக்கும்வேலை கொடுத்து உன் புத்தி சொல்லுகின்றபடி நட - புத்தர்

உங்கள்(periyar) நினைவு நாளில்(Dec 24) நாங்கள் உங்கள் மீதான நன்றியை எங்கள் எதிர்கால ஆக்கங்களால் வெளிப் படுத்துவோம் என்றும், கடவுள், மதம்,சாதி, சினிமா, மது, மருந்து, என்ற பலவகை போதைகளும், மூட நம்பிக்கை அண்டாத பெரு நெருப்பாக வாழ்வேன் என்றும் உங்கள் பாதையில் எங்கள் பயணம்
ஒரு எழுச்சி மிகுந்த பாடலாக என்றும் எதிரொலிக்கும் என்றும்…..
நாங்கள் உறுதி கூறுகிறோம்…

எனது 60 வருட பந்தம் இன்னாடுடன் என்னை இந்தியன் ஆக்கினால்,எனது 3000 வருட சொந்தம் என்னை ஈழத்துடன் சகோதரன் ஆக்கியது...

வீட்டுக்குப் பல வாசல்கள், ஜன்னல்கள் இருக்கலாம். தலைவாசலா தமிழ் இருக்கட்டுங்கிறது தான் எங்களோட வேண்டுகோள்.

கடவுளைச்சாட்டியே எல்லா அதிகாரங்களும், எல்லா சுயநலங்களும், எல்லா ஒடுக்குமுறைகளும் நிலைப்படுத்தப்படுகிறது. நியாயப்படுத்தப்படுகிறது, நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அந்தக் கடவுளை ஒழிக்காமல் இந்த அதிகாரங்களியும் ஒடுக்குமுறைகளையும், பொய்களையும் பித்தலாட்டங்களியும் ஒழிக்கவே முடியாது.

"ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை."
- தந்தை பெரியார்

பிரிட்டிஷ் மக்கள்கிட்டப் போய் தமிழில் பேசுங்கன்னு சொன்னா அது அயோக்கியத்தனம், கர்நாடகாவில் போய் தமிழ்ப் பெயர் வைங்கன்னு சொன்னா நான் இனவெறியன். என் சொந்த மக்கள்கிட்ட மம்மிக்கு பதிலா அம்மான்னு சொல்லுங்கடான்னு சொல்றது தப்புன்னா, இந்தக் கொடுமையை எங்க போய் சொல்றது?

--சீமான்

No comments:

Post a Comment